உலகம் சுற்றும் முதியவர்!
அமெரிக்காவைச் சேர்ந்த, ஆல்பிரட் போடெல் என்பவருக்கு, 78, வயதாகிறது. ஆனால், இவர் தன் வாழ்நாளில், 50 ஆண்டுகளை, வெளிநாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவே செலவிட்டுள்ளார். இதுவரை, 196 நாடுகளை ரவுண்டு அடித்து விட்டார்.பாகிஸ்தானுக்கு சென்றபோது, இந்திய உளவாளி என்று சந்தேகித்து, இவரை சிறையில் அடைந்து விட்டனர். இதேபோன்று கியூபாவுக்கு சென்றபோதும் சிறைவாசத்தை அனுபவித்தார். ஏமனுக்கு சென்றபோது, கொரில்லா குரங்குகளிடம் கடி வாங்கினார். ஸ்பெயினில் எருதுகளிடம் முட்டு வாங்கினார்.அடர்ந்த வனப் பகுதிகளுக்கு சென்றபோது, சாப்பிட எதுவுமே கிடைக்காமல், பாம்பு, பல்லி மற்றும் பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். ஆனாலும், இவரின் சுற்றுலா ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை. 'கடைசி மூச்சு இருக்கும் வரை, சுற்றிக் கொண்டே இருப்பேன்...' என்கிறார், இந்த அதிசய மனிதர்.— ஜோல்னாபையன்.