சாமி சிலைகள் உருவாகும் மயிலடி!
கோவிலில், கடவுளின் உருவச் சிலைகளுக்கு முன், கண் மூடி நின்று, பிரார்த்தனை செய்யும் பக்தர்கள், எப்போதாவது, அச்சிலைகளை வடித்த, கலைஞர்களை பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கிராமத்தில், அதிக அளவில் கடவுள் சிலைகள் தயார் ஆகின்றன. இங்குள்ள கலைஞர்கள், நூற்றாண்டுகளாக கடவுள் சிலைகளை, ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகின்றனர். தமிழகம், கேரளா மட்டுமின்றி, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இங்கு தயாராகும் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.— ஜோல்னா பையன்.