மாடி ஏறும் சக்கர நாற்காலி!
சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்கள் மற்றும் உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு, பிரத்யேக சக்கர நாற்காலியை தயாரித்துள்ளனர் ஜப்பானியர். இதில் அமர்ந்தவாறே மாடிப் படிகளில் ஏற முடியும்; அதுமட்டுமல்ல, கரடுமுரடான சாலைகளில் கூட எளிதாக செல்லும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். 'சென்சார்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதை தயாரித்துள்ளனர். இதன் மூலம், வீட்டில் இருக்கும் நோயாளிகளின் உடல்நலனை கண்காணிப்பதற்கான வசதியும் இதில் உள்ளது.— ஜோல்னாபையன்.