சம்மர் டூர்!
* வெளியூர் பயணத்தின் போது, சிலருக்கு, வயிற்று வலி, வாந்தி வரும். ஒரு கப் சோம்பு, அரை கப் ஓமம், கால் கப் ஜாதிக்காய், தேவையான அளவு கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, பொடித்து, எடுத்துச் செல்லவும். இந்த பொடியுடன் சிறிது உப்பு கலந்து, வயிற்று வலி, வாந்தி வரும்போது சாப்பிட்டால், குணமாகும்.* ரயிலில் பயணிப்போர், 'சீனியர் சிட்டிசன்' மற்றும் குழந்தைகள் இருந்தால், சலுகை உண்டு. அதற்கான ஆவணங்களை எடுத்துச் சென்றால், டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது காண்பிக்கலாம்.* விடுதி அறைகளில் தங்கியிருக்கும்போது, குளிப்பதற்கு முன், கைகடிகாரம், நகைகளை கழற்றி வைத்திருப்போம். அறையை காலி செய்வதற்கு முன், மறவாமல், அலமாரி மற்றும் குளியலறையில் ஏதேனும் உள்ளதா என பார்த்து, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.* முதுமை காரணமாக, சுற்றுலாவில் பங்கேற்காதோர் வீட்டிலிருந்தால், வெளியூரிலிருந்து போன் செய்து நலன் விசாரித்தால், அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.