உள்ளூர் செய்திகள்

கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்!

மார்கழி மாதம் பிறக்கப் போகிறது; வாசலில் விதவிதமான கோலங்கள் போட்டு, அழகு கூட்டலாமே!* கோலம், வாசலுக்கு மட்டும் அல்ல, நமக்கும், அழகை தருகிறது. எப்படியெனில், விரல்களால், கோல மாவை எடுத்து, வளைத்து வளைத்து போடும் போது, அது, நம் கை விரல்களுக்கு, நல்ல பயிற்சியாக அமைகிறது.* குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.* தினசரி சூழலால், சஞ்சலமாகும் மனமும் கூட, கோலம் போடும் போது ஒருமுகப்படும்.* கோலம், நம் கற்பனை திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது.* அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து, பார்க்க தெளிவாக, அழகாக இருக்கும்.* கோலம், தீய மற்றும் துஷ்ட சக்திகளை, வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்.* லட்சுமி தேவியை, நம் வீட்டிற்கு வரவழைக்கும்.* கோலம் போடுவதால், மும்மூர்த்திகளின் ஆசிகளும், நமக்கு கிடைக்கும்; எப்படி என்கிறீர்களா... அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம், சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள்; அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, நம்மை ஆசிர்வதிப்பர்.* கோலம் போடுவதால், வீடு மங்களகரமாக காட்சி அளிக்கும்.* தினமும் கோலம் போடும் போது, வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு குறைவே ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !