உள்ளூர் செய்திகள்

ஒரு மீனின் விலை, ரூ.2 கோடி!

'கியோசி கிமுரா' என்ற, ஜப்பான் ஓட்டல் அதிபர் ஒருவர், 'டியூனா கிங்' என்ற புனைபெயரில் அழைக்கப்படுகிறார். காரணம், டோக்கியோவில் நடந்த மீன் சந்தையில், விற்பனைக்கு வந்த, 287 கிலோ எடையிலான, டியூனா வகையை சேர்ந்த பெரிய மீனை, 2 கோடி ரூபாய்க்கு வாங்கி, அனைவரையும் அசத்தியுள்ளார். கேட்டதற்கு, 'இந்த டியூனா மீனானது, தனி ருசி கொண்டது. இதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும். இவ்வளவு பணம் கொடுத்து, இந்த மீனை வாங்க காரணம், இதன் ருசியை, என் வாடிக்கையாளர்களும் உண்டு மகிழத்தான்...' என்கிறார்.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !