உள்ளூர் செய்திகள்

வாட்ஸ்-ஆப்பில் வரும் வில்லங்கம்... உஷார்!

'வாட்ஸ்-ஆப்'பில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் புகைப்படங்களைத் திறப்பது கூட, ஆபத்தானதாக மாறியிருக்கிறது.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், அண்மையில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. அதாவது, ஹேக்கர்கள், 'ஸ்டெகானோகிராபி' எனும் நுட்பத்தைப் பயன்படுத்தி, படங்களுக்குள், 'மால்வேர்' எனப்படும் வைரஸை மறைத்து வைக்கின்றனர். இந்த படங்களைத் திறந்தவுடன், அந்த, 'மால்வேர்' உங்கள் மொபைலில் செயல்பட்டு, வங்கி விவரங்கள், ஓ.டி.பி., கடவுச்சொற்கள் போன்ற தகவல்களை எடுத்துக்கொள்ள வழி வகுக்கிறது.பாதுகாப்பாக இருக்க, 'வாட்ஸ்-ஆப்'பை எப்போதும் புதுப்பிக்கவும். தெரியாத எண்களிலிருந்து வரும் படங்கள் மற்றும் 'லிங்கு'களைத் தவிர்க்கவும். 'டெஸ்க்டாப், வாட்ஸ்-ஆப்' பயனர்கள், சந்தேகத்திற்குரிய படங்களைப் புறக்கணிக்கவும்.நம்பகமான, 'ஆப் ஸ்டோர்'களில் இருந்து மட்டும் செயலிகளைப் பதிவிறக்கவும். ஒரு சிறிய புகைப்படம், உங்கள் வங்கி கணக்கையோ, வாழ்க்கையையோ பாதிக்கலாம். உஷாராக இருங்கள்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !