பெண் அதிகாரிக்கு மிரட்டல்!
திருவனந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை, கமிஷனராக உள்ளார் டி.வி.அனுபமா. இவருக்கு தினமும் ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.சமீபத்தில், கேரளாவிற்கு மற்ற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளில், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதை, பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர் உணவு பாதுகாப்பு துறையினர். இதனால், காய்கறிகளை கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் அனுபமா.இது, பூச்சிகொல்லி மருந்து விற்பனையாளர்களை, ஆத்திரப்படுத்தியுள்ளதால், பல்வேறு வழிகளில், அனுபமாவிற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், 'மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நடவடிக்கை எடுப்பது என் கடமை; எந்த மிரட்டல்களுக்கும் அஞ்ச மாட்டேன்...' என்கிறார், இந்த கடமை உணர்வு உள்ள அதிகாரி!— ஜோல்னாபையன்.