சம்மதம் பெற...
முருகப் பெருமானை நேருக்கு நேராகத் தரிசித்தவர்; அவரது அருளை முழுமையாகப் பெற்றவர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். ஆறுமுகனைத் துதித்து, அற்புதமான பாடல்களைப் பாடியவர். எதைச் செய்தாலும் முருகன் உத்தரவு பெற்ற பின்தான் செய்வார், ஸ்ரீசுவாமிகள்.பிரப்பன் வலசை எனும் தலத்தில் அவர் இருந்தபோது, முருகப் பெருமானை வேண்டி எழுதிய பாடல் ஒன்றில், பொங்கு குறக் கோத்திரத்தோர் பெண் திருடிச் சென்ற பெருந் திருடா! என் போதம் உண்டு திருடத் தெரியாயோ... என, எழுதினார்.முருகப் பெருமானை, திருடன் என்று சொல்லி பாடல் எழுதப்பட்ட ஓலைச் சுவடியை, தன் தலையணை அடியில் வைத்து படுத்துக் கொண்டார், ஸ்ரீசுவாமிகள். சற்று நேரத்தில், அவர் முதுகில் யாரோ, கையால் மெதுவாக அடிப்பதைப் போல இருந்தது. அதன் பிறகு ஸ்ரீசுவாமிகளுக்குத் துாக்கம் ஏது?முருகப்பெருமானிடம், 'பாடுமவர் தோழா... அடியேன் எழுதிய இந்தப் பாடல், உம் திருவுள்ளத்திற்கு இசைவில்லையா? உம் திருவுள்ளத்திற்கு மாறாக, எதையும் செய்ய என் மனம் விரும்பாது.'ஆகையால், இந்தப் பாடல் உமக்கு விருப்பமில்லை என்றால், அதற்கான அறிகுறியை எனக்கு தெரிவிக்கவும். அவ்வாறு தெரிவித்தால், இந்தப் பாடலை உடனே நீக்கி விடுகிறேன்...' என மனதார வேண்டி, சிந்தித்தபடியே படுத்தார். விடியும் வரையில் எந்த விதமான அறிகுறியும் இல்லை. அதன் பிறகே, 'இப்பாடல் முருகனுக்கு உவப்பானது...' என்று எடுத்துக் கொண்டார், ஸ்ரீசுவாமிகள். நம் பிரச்னைகள் தீர, இரவு உறங்கப் போகும் முன், 'தெய்வமே, எனக்கு வேறு யார் துணை? என்ன செய்ய வேண்டும் என்று நீ வழிகாட்டு...' என்று மனமுருக பிரார்த்தனை செய்வோம். தெய்வம் கனவில் வந்து, வழி காட்டும்; துயர் தீர்க்கும்.பி.என். பரசுராமன்ஆன்மிக தகவல்கள்!பிறந்த நாள், திருமண நாள், பவுர்ணமி, மாத பிறப்பு மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது.