சப் - இன்ஸ்பெக்டரான திருநங்கை!
சேலம் கந்தப்பட்டியை சேர்ந்த கலையரசன் - சுமதி தம்பதியின் செல்ல மகன் கல்லூரியில் படிக்கும் போது, தான் ஒரு ஆண் அல்ல என்ற உண்மையை உணர்ந்து, அதைப்பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால், 'நீ ஆண் தான்...' என்று கூறி, சண்டை போட்டுள்ளனர் பெற்றோர். அதனால், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து, கே.எம்.சி., மருத்துவமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்து, பிரிதிகாவாக மாறினார். தோழிகள் பானு மற்றும் குருபாரதி இவருக்கு துணையாக இருந்தனர். 'கடும் போராட்டத்துக்கு பின்தான், போலீஸ் ஆக முடிந்தது; ஐ.பி.எஸ்., பட்டம் பெற வேண்டும் என்பது தான் என் லட்சியம்...' என்று கூறியுள்ளார்.— ஜோல்னாபையன்.