அந்துமணி பதில்கள்!
அ.சுகுமார், காட்டுக்கானுார்: தாங்கள் பொக்கிஷமாக எதையாவது பாதுகாத்து வருகிறீர்களா?வாசகர்கள் தான். நீங்கள் தானே என் பொக்கிஷம்!க.கல்பனா, சென்னை: தமிழக துணை முதல்வராக, உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறதே... மூத்த தலைவர்கள், தி.மு.க.,வில் பலர் இருக்கும்போது, ஏன் குடும்பத்தினருக்கே இப்பதவி வழங்கப்படுகிறது?வேறு யாரும் திறமைசாலிகளாக ஸ்டாலின் கண்களுக்குத் தெரியவில்லையோ, என்னவோ!வி.மாயகிருஷ்ணன், புதுக்கோட்டை: கட்டாந்தரையில், துண்டை விரித்துப் போட்டு, துாங்கிய அனுபவம் உண்டா?கட்டாந்தரையில் படுத்ததில்லை; 'தினமலர்' நாளிதழ் அதிகாலை அச்சாகி முடிந்ததும், 'நியூஸ் பிரின்ட் ரோலின்' பக்கவாட்டில் வைத்து அனுப்பப்படும், பாளத்தை விரித்து, ஆபீசில் படுத்துக்கொண்ட அனுபவம் உண்டு!முகதி.சுபா, திருநெல்வேலி: தமிழகத்திலும், கர்நாடகத்திலும், கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்தாலும், காவிரி பிரச்னையை தீர்க்காமல் இருக்கின்றனரே... ராமகிருஷ்ண ஹெக்டே காலத்தில், தீர்வு கண்டாரே, எம்.ஜி.ஆர்.,?நிரந்தர தீர்வு எப்போதும் ஏற்பட்டதில்லையே.எம்.ஜி.ஆர்., அவ்வப்போது பேசி, தமிழகத்துக்கு தண்ணீரை வரவழைத்து விடுவார்; அவ்வளவு தான்! பாரதிமுருகன், மணலுார்பேட்டை: ஞாயிறு அன்று அசைவமா அந்துமணியாரே?நான் தான் முட்டை கூட சாப்பிட மாட்டேனே... சுத்த சைவம் தான்!தே.ராஜாசிங் ஜெயகுமார், தஞ்சாவூர்: தமிழக அரசின் கள்ளச்சாராயத்துக்கு எதிரான புதிய சட்டம், ஏதாவது பலன் தருமா?கண்டிப்பாக பலன் தரும், மிக தீவிரமாக அமல்படுத்தினால்!* அஜித், மாடம்பாக்கம், சென்னை: லோக்சபாவில் அனல் பறக்கிறதே... இது நாட்டுக்கு நன்மையா, தீமையா?நல்லதே அல்ல; நம் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறதே!* தே.மாதவராஜ், கோவை: முதல்வரின் காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகளைக் கடந்து, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவாக்கம் செய்தது பற்றி?நல்ல திட்டம் தான்; நல்ல முறையில் செயல்பட வேண்டும்!