அந்துமணி பதில்கள்!
மு.ஆதினி, சேலம்: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நிறங்கள் ஏதேனும் உண்டா?முன்பெல்லாம், சிவப்பு நிறம் பிடித்திருந்தது; பின், கருப்புக்கு மாறி விட்டேன்!கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு!வே.முருகேசன், கன்னிவாடி, திண்டுக்கல்: என் வயது, 64. திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். சிறு வயதிலிருந்தே, பிறருக்கு உதவும் குணம் உடையவன். என் மனைவிக்கு இது பிடிக்காது; வசவு வாங்கிக் கொண்டே உதவி செய்கிறேன். வசவுடன் உதவுவதை தொடர்வதா; நிறுத்தி விடவா?வசவு பாட்டுக்கு வரட்டும்; கண்டு கொள்ளாதீர்கள். உதவுவதை நிறுத்த வேண்டாமே!எல்.என்.சிவகுமார், சென்னை: உங்களின், 'ஹாபி' எது?வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதுவதும், பா.கே.ப., எழுதுவதும்!வேலை தான், 'ஹாபி' எனக்கு!* இரா.நாராயணசாமி, கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, பூங்காக்கள், அரங்கம், நுாலகக் கட்டடங்கள் அனைத்தும் அரசு செலவில் கட்டப்படுகிறதா அல்லது கட்சி செலவிலா?அரசு பணத்தை வீணாக செலவழிக்கின்றனர்!* அ.ரவீந்திரன், கன்னியாகுமரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ட, பிரதமர் கனவு என்னாச்சு?கனவு, கனவாகவே முடியும்; நனவாக வாய்ப்பில்லை!எம்.மனோகரன், ராமநாதபுரம்: இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கு விற்பனைக்கு வந்த, ஆவின் பால் பாக்கெட்டில், நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதே...அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற பயம் வந்து விட்டதோ என்னவோ!தி.நா.பஞ்சாபகேசன், சென்னை: கடந்த 1967லிருந்து கூவம் நதி சீரமைப்புக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில், இன்றும் அப்படியே தானே உள்ளது? பணம் எல்லாம் எங்கே போனது? உண்மையிலேயே என்ன தான் நடந்தது?பணத்தை கரையானோ, எலியோ தின்று விட்டது!வெ.கார்த்திகா, திண்டுக்கல்: மனைவிக்கு உதவுவதை, மகா மோசமாக என் உறவினர்கள் பேசுகின்றனரே... என்ன செய்யலாம்?அப்படிப் பேசுபவர்களைத் தவிர்த்து விடுங்கள்!