உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பலிகள்!

இந்த பூமிப் பந்தில்நாடுகள் பேதமின்றிஜாதி மத இன பாகுபாடின்றி...இயற்கை சீற்றங்கள் நில நடுக்கம்அடாது மழை கடும் வெள்ளம் எரிமலை வெடிப்பு மேக வெடிப்பு அணை உடைப்பு...இத்தகைய பேரிடர்களால் மக்கள் மாள்வது ஒருபுறம் இருந்தாலும்...அதிகார வர்க்கத்தினர் பேராசையால் நாடு பிடிக்கவும் அண்டை நாடுகளை வளைத்துப் பிடிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் போரிடுகின்றனர்!மக்களை கொத்து கொத்தாக கொல்ல நவீன ஏவுகணைகள், ராக்கெட்டுகள் அணு ஆயுதங்கள்பயன்படுத்தப்படுகின்றன! இயற்கை பேரிடர்களின் மரணங்களை விட செயற்கை போர்களால் மடிபவர்களே அதிகம்!இயற்கையை மனிதன் தடுக்க இயலாது...செயற்கை ஆயுதங்களை தடுக்கலாம்நெடுநாள் வாழ! —  சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !