கவிதைச்சோலை - மலர்ந்தது அன்பின் தீப ஒளி!
இனிமை நிறைந்து வந்தது தீபாவளிஇனி எங்கும் நிறைவது தீப ஒளிஇந்த தேசம் காணப் போவது நல்வழிஇனி யாரும் நாடப் போவதில்லை பொய்மொழி!நன்மைகள் விளைய வந்தது தீபாவளிநலன்கள் விசாரிக்க வந்தது தீப ஒளிநல்லவை எல்லாம் வளர மலர்ந்தது ஒளிநாட்டரை வாழ வைத்தது அன்பு மொழி!நிலவின் இனிமையின் சுடரும்நில்லாமல் ஓடும் தென்றல் காற்றும்நிஜமாய் கலந்த வசந்த காலமும் நிறைவாய் தந்திட வந்தது நிதமும்! அன்பின் அடைக்கலம் தந்து அருள் ஒளிஅனைவருக்கும் தந்திட வந்தது தீபாவளிஅன்னையைப் போல் அரவணைப்பு மொழி அளித்திட உடனே வந்தது தீப மொழி! எல்லாருக்கும் வாழ்த்து வழங்கிட எல்லா திசையிலும் மலர்ந்தது தீப ஒளிஎங்கும் நலம் விசாரித்திட அன்பு மொழிஏந்தி வந்தது இங்கு ஒரு தீபாவளி! மலரின் சுகந்த மணம் தந்திட மன்னரின் மகிழ்ச்சி மனதில் படர்ந்திடமகோன்னத சந்தோஷம் யாவரும் பெற்றிட மலர்ந்து வந்தது அன்பின் தீபாவளி! ரஜகை நிலவன், மும்பை