உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - தை பிறந்தால் வழி பிறக்கும்!

பழையன கழிந்துபுதியன புகுத்திசுத்தம் செய்யும் திருவிழாபோகிப் பண்டிகை!அறுவடை முடிந்துபுது நெல்மணிகளைகுத்தி அரிசியாக்கி...புது மண்பானைவைத்து இஞ்சிமஞ்சள் கொத்து கட்டி...சூரிய ஒளி படர்ந்திடகரும்பும், பழமும்வைத்து புதுப்பொங்கல்திருவிழா!குலவு சத்தம்கேட்கும் நடுவில்பொங்கலோ பொங்கல்பெரும் ஒலி...வாயில்லா ஜீவனுக்கும்நெல்லி மாலை, நெட்டி மாலைஅலங்காரம் படையல்மாட்டுப் பொங்கல்...வீர தீர விளையாட்டுஜல்லிக்கட்டு போட்டிபெண்களின் கும்மியடி கூட்டம்...தமிழர்களின் திருநாள்மண்வாசம் பெருகிமனிதநேயம் உருகிஉறவுகளை, நட்புகளை...சேர்க்கும் சமத்துவ பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காட்டும் பெருவிழா!—  ஆர். சீதாராமன், சீர்காழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !