உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: தொடருங்கள்!

வளைவுகளும் திருப்பங்களும் நிறைந்ததே வாழ்க்கைநெளிவு சுளிவுகளுடன் அதைநேர்மையாக கடக்கணும்! தோல்விகள் வெற்றிகளை தடுக்கவே முனையும் - அதைபுறந்தள்ளி தொடர்ந்துமுயற்சியுடன் தொடரணும்! உங்கள் இலக்குகள் அருகில்நெருங்கும் சமயம் அவற்றைதடுக்கும் போராட்டங்கள் வரலாம்சகிப்புத் தன்மையோடு முன்னேறணும்! போட்டி பொறாமைகள் தடுக்கலாம்எதிர்த்துப் போட்டியிட்டு தொடர மனதில் உறுதி வேண்டும் - என்றும் முயற்சி தோற்றதில்லை உலகில்! எனவே முடங்கி விடாதீர்கள்தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்தோல்வியில் துவண்டு விடாதீர்கள்வெற்றிக்கனி கையில் வந்திடும்! ஆக்கமும் ஊக்கமும் கைவந்திட நோக்கமும் எதிர்பார்ப்பும்விரைந்து நிறைவேறும்வெற்றியும் வந்திடும் தன்னாலே!உழைப்பும் தொடர் முயற்சியும்கைக்கொண்டால் எதையும்வெற்றி கொள்ளலாம் என்றும்அமைதியான நதியிலே பயணிக்கலாமே! —கே.என்.ராமகிருஷ்ணன், கோவை.தொடர்புக்கு: 90434 53323


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !