மனமிருந்தால்...
பிரிட்டிஷ் நிறுவனம், 90 ஆண்டுகளுக்கு முன் தயாரித்த, 'ஆஸ்டன் மார்ட்டின்' என்ற பழம்பெரும் கார் போலவே, ஒன்றை தயாரித்துள்ளார், கேரளா மாநிலம், தொடுபுழாவில் பட்டறை வைத்து இருக்கும், கார் மெக்கானிக் அர்ஜுன். இந்த கார் உருவாக, தன்னுடைய, நான்கு வயது மகன் தான் காரணம் எனக் கூறும் இவர், வேன் என்ஜினை காரில் பொருத்தியுள்ளார்.பொம்மை காரை மகன் கேட்க, 'கூகுளில்' இந்த கார் பற்றிய தகவல்கள் மற்றும் காயலான் கடைகளில் இருந்து உதிரி பாகங்களை சேகரித்து, இதை உருவாக்கியுள்ளார். இதற்காக, 3 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார், அர்ஜுன். ஒரு சிலரிடமே உள்ள, ஒரிஜினல், ஆஸ்டன் காரின் விலை, 25 லட்சம் ரூபாய். — ஜோல்னாபையன்