இதப்படிங்க முதல்ல...
மீண்டும் பட நிறுவனத்தை, தூசு தட்டும் தனுஷ்!தன், 'ஒண்டர் பார் பிலிம்ஸ்' சார்பாக, பல படங்களை தயாரித்த, தனுசுக்கு, ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்ததால், படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார். இருப்பினும், சமீபகாலமாக, ஒரு பக்கம் நடிப்பது, இன்னொரு பக்கம் படங்களை இயக்குவது என்று, செயல்பட்டு வருகிறார்.'அடுத்தபடியாக, நான் இயக்கும் படங்களை, என் சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளேன். இந்த நிறுவனத்தில் தயாரித்த பல படங்கள் படுதோல்வி அடைந்ததால், தற்போது, 'நியூமராலஜி' பார்த்து, தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், தனுஷ்.— சினிமா பொன்னையாஅனிகா சுரேந்தரன் போட்ட, 'அக்ரிமெண்ட்'!அஜீத்தின்,என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில், அவரது மகளாக நடித்த, மலையாள நடிகை, அனிகா சுரேந்திரன், தனுஷுடன், 'டூயட்' பாட வேண்டும் என்ற ஆசையில், அவரை துரத்தி வந்தார்.விளைவு, தன் அக்காள் மகனை, 'ஹீரோ'வாக வைத்து, தான் இயக்கும் படத்தில், அனிகாவை, 'ஹீரோயினி' ஆக்கி விட்டார், தனுஷ்.'எதிர்காலத்தில், உங்களுடன், 'டூயட்' பாட, கண்டிப்பாக வாய்ப்பு தர வேண்டும்...' என்று, அவரிடம் வாய்மொழி, 'அக்ரிமென்ட்' உடன், இப்படத்தில் நடிக்கிறார், அனிகா சுரேந்திரன்.— எலீசாரஜினிக்கு அழைப்பு விடுத்த, அமிதாப்பச்சன்!ரஜினி,- கமல் ஆகிய இருவரும், ஆரம்ப காலத்தில், ஹிந்தியில், அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். இருப்பினும், அமிதாப்பச்சன் இப்போது தான் முதன்முறையாக, ரஜினி நடித்த, வேட்டையன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இந்நிலையில், 'அடுத்தபடியாக, நான் ஹிந்தியில் நடிக்கும் ஒரு படத்தில், நீங்கள் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும்...' என்று, ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளார், அமிதாப்பச்சன்.அதனால், நீண்ட இடைவேளைக்கு பின், மீண்டும் பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்க உள்ளார், ரஜினி.— சி.பொ.,பவுன்சர்களுடன் வலம் வரும், த்ரிஷா!தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து சென்ற, த்ரிஷாவுக்கு, சில மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன.தன் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருப்பதால் தான், யாரோ போட்டி நடிகையர், தன்னை மிரட்டிப் பார்ப்பதாக கூறி, தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, சில, 'பவுன்சர்'களை நியமித்திருக்கிறார், த்ரிஷா.த்ரிஷா படப்பிடிப்பு தளத்துக்குள் வருவது துவங்கி, அவரை வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை, முழு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர், 'பவுன்சர்'கள்.இதனால், முன்பு மாதிரி கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சில வம்புக்கார ரசிகர்களும், த்ரிஷாவை சீண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை உடன், ஒரு படத்தில் ஜோடியாக நடித்தார், நடிப்பு அரக்கன். அடிக்கடி நள்ளிரவு நேரங்களில், அம்மணியை இவர் போனில் அழைத்து, கடலை போட்டு, காதல் மொழி பேசி, தன் வலையில் விழ வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.ஆனால், மேற்படி நடிகர், அரைக்கிணறு வயதை கடந்து விட்டதால், 'அப்பா வயது நடிகர், என்னை துரத்துவது நியாயமா?' என்று, அவரது வலையில் சிக்காமல், அம்மணி தொடர்ந்து, 'எஸ்கேப்' ஆகி வருவதாக, கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கின்றனர்.சினி துளிகள்!* கடமையை செய் படத்திற்கு பிறகு, வில்லன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வந்த, வாய்ப்பை மறுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.* தன், 48வது படத்தில், 'ஹீரோ - வில்லன்' என, இரண்டு வேடங்களில் நடிக்கும், சிம்பு, ஒரு வேடத்தில், ஒல்லியாகவும், இன்னொரு வேடத்தில், எடை கூடியும் நடிக்கிறார்.அவ்ளோதான்!