உள்ளூர் செய்திகள்

பச்சை இறைச்சியை சாப்பிடும் இளைஞர்!

கேரள மாநிலம், வயநாடு காட்டுப்பகுதியில் வசிப்பவர், சுரேஷ், வயது: 40. இவரை கண்டாலே இங்குள்ளவர்கள் சற்று விலகி செல்வர்.காட்டில் வசிக்கும், சில சிறு உயிரினங்களை, பிடித்து பச்சையாகவே, கடித்து சாப்பிடுவார். இதுமட்டுமல்லாமல், துர்நாற்றம் வீசும், புழு பூச்சிகள் உள்ளிட்டவைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி சாப்பிட்டு விடுவார். 'மனிதர் தானா இவர்?' என கேட்கின்றனர், பலர். 'சிறு வயதிலிருந்து இப்படியொரு சுபாவம் எப்படியோ என்னை தொற்றிக் கொண்டது. அனைத்து மிருகங்களின் இறைச்சியையும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடுவேன். இதனால் தான், நான் பூர்ண ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன்...' என்கிறார். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !