உள்ளூர் செய்திகள்

வீடு கட்டுபவர்கள் கவனத்துக்கு...

* வீட்டின் முகப்பில், சிறிது இடம் விட்டுக் கட்டுவதன் மூலம், வீட்டைச்சுற்றி காற்றோட்டம் சீராக இருக்க உதவும். *     'டைல்ஸ்' தேர்வு ரொம்ப முக்கியம். குளுமையான சூழலுக்கு காரைக்குடி டைல்ஸ் தான் சிறந்தது. *   சுவர்களை தடித்து கட்டினால், வெளியில் நிலவும் குளிர்ச்சியும், அதிக வெப்பமும் வீட்டுக்குள் வராமல் இருக்கும். மெல்லிய சுவர்களை கொண்ட அறைகளில், மரக்கட்டைகளால் சுவர் அமைக்கலாம். இவை வெப்பத்தை அறைக்குள் நுழைய விடாது. *  மொட்டை மாடிகளில், 'ஆன்டி ரிப்ளெக்டர் டைல்ஸ்' பயன்படுத்தலாம். இது, வரும் வெயிலை திருப்பி அனுப்பும் முறை. வீட்டிற்குள் வெப்பத்தை இறங்க விடாது. * வெள்ளை நிறத்திற்கு வெப்பத்தை உள்வாங்கும் தன்மை மிக குறைவு என்பதால், வீட்டை சுற்றி வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடிக்கலாம்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !