நடந்தது என்ன?
மே 26, 946 - இங்கிலாந்து மன்னர், முதலாம் எட்மண்ட், திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 1679 - மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உலகின் முதல் மனித உரிமைச் சட்டம், 'ஹேபியஸ் கார்பஸ்' சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1738 - முகலாய பேரரசர் மற்றும் ஈரானின் நாதிர்ஷா இடையே செய்து கொண்ட ஒப்பந்தம்படி, இந்தியாவிலிருந்து, ஆப்கானிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டது. 1897 - 'டிராகுலா' என்ற பிரபல கதை, ஐரீஷ் எழுத்தாளர், பிரமாஸ் டோக்கர் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது. 1937 - தமிழ் திரைப்பட நடிகை மனோரமா பிறந்த நாள். 1955 - இமயமலையின் உயரமான சிகரமான, 8,558 மீட்டர் உயரமுள்ள கஞ்சன் ஜங்கா சிகரத்தில், சார்லஸ் வென்ஸ் என்பவர் முதல் முறையாக ஏறினார். 1999 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட், 318 ரன்கள் குவித்து, உலக சாதனை செய்தனர். 2013 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2014 - நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் ஆனார்.