கவிதைச்சோலை - வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
பொய்யும் புரட்டும்பொங்கியெழும் இடமெல்லாம்உண்மையும், சத்தியமும்வேரோடு சரிந்துசோதனைகளாக வந்து குவியும்!தொழில் வளம் பெருகும்இடமெல்லாம்வருமானம் கொழித்துவாழ்க்கை தரம்ஆல மரம் போல உயர்ந்து நிற்கும்!கற்றல் திறன்மிகுந்த இடமெல்லாம்அறிவும், அனுபவமும்அளவில்லாமல் வளர்ந்துபணிவும், பண்பும்வளர்ச்சி கொடுக்கதுணை நிற்கும்!மரங்களை வளர்த்தஇடங்களில் எல்லாம்மேகங்கள் ஒன்று திரண்டுமழை பொழிவை அதிகரிக்கும்!மதிப்பும், மரியாதையும்மேலோங்கும் இடமெல்லாம்நல்லுறவு பூத்துக்குலுங்கிஒற்றுமை வலிமை பெறும்! அவசியமற்ற வார்த்தைகள்அள்ளி வீசப்படும் இடமெல்லாம்அமைதி சீர்குலைந்துபிரிவினை எட்டிப் பார்க்கும்!அநீதியும், அட்டூழியங்களும்கைகோர்க்கும் இடமெல்லாம்நிம்மதி சுக்குநுாறாகிவேதனை எனும் தீவாழ்க்கையை சுட்டெரிக்கும்!உழைப்புக்கு முற்றுப்புள்ளிவைக்கும் இடமெல்லாம்பிழைப்புக்கு வழியின்றிவறுமை நோய் வாட்டி வதைத்துவாழ்க்கைக்கே முற்றுப்புள்ளிவைத்து விடும்!— எல்.மூர்த்தி, கோவை.