உள்ளூர் செய்திகள்

செல்ல நாயுடன், வாக்கிங் செல்கிறீர்களா?

மேற்காசிய நாடான, ஈரான் தலைநகர் டெஹ்ரானில், 'நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றால், அதன் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்...' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முக்கிய சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு, தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை, நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதை, பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.நாய்களால், பொதுமக்களுக்கு, பயமும், இடையூறும் ஏற்படுவதாக கூறி, இந்த கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது, ஈரான் அரசு. அபராதம் விதிக்கப்பட்டும், தொடர்ந்து அந்த உத்தரவை மீறினால், நாயின் உரிமையாளரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !