உள்ளூர் செய்திகள்

குபேர வழிபாடு!

பரத்வாஜ முனிவருக்கு தவப்புதல்வனாக விளங்கியவன், வைஜ்ரவணன். தந்தையைப் போலவே தவசீலனான இவன், பிரம்ம தேவனை நோக்கி தவம் செய்தான். இதனால், மகிழ்ந்த பிரம்மதேவன், நிதிகளின் தலைவனாக நியமித்தார்.நிதிகளுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றதும், குபேரன் என்ற பட்டப் பெயரைப் பெற்றார். குபேரனுக்கு இனிப்புகள் படைத்து, தீபாவளி அன்று மாலையில் வழிபடுபவர்களுக்கு, நவநிதிகளும் சேரும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டின் உட்பொருள், உறவினர்களை சந்தித்து வாழ்த்து சொல்லும் நாளில், அவர்களுக்கும் அன்று முதல் தடையில்லாத இனிய வாழ்வு கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வதால், மகிழ்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !