மேலும் செய்திகள்
அமைச்சருடன் சந்திப்பு
1 hour(s) ago
அடுத்தவர் நிலத்தை அபகரித்த 80 வயது மூதாட்டி கைது
1 hour(s) ago
பெங்களூரு: ''அனைத்து மதங்களும் சிறந்தவையே. எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை,'' என அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, 'மற்ற மதங்களை விட இஸ்லாம் சிறந்தது' என சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்; அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் சிவகுமார் விளக்கம் அளிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியிருந்தார். இந்நிலையில் பசவராஜ் ராய ரெட்டி நேற்று கொப்பால் மாவட்டம், எலபுர்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார். பின், அவர் அளித்த பேட்டி : அனைத்து மதங்களும் சிறந்தவையே. எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை. நான் அனைத்து மதங்களையும் வழிபடுகிறேன். எனக்கு மெக்காவுக்கு புனித பயணம் செல்ல ஆசை. அங்கு செல்வதற்கு மதம் மாற வேண்டும். ஆனால், நான் எக்காரணம் கொண்டும் மதம் மாற மாட்டேன். ஏராளமான சிவன், அம்மன் கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்கிறேன். புதிதாக ஒரு மதத்தை உருவாக்கக்கூடாது என யோசிக்கிறேன். யார் எந்த மதத்தை பின்பற்றினாலும், எனக்கு ஆட்சேபனை இல்லை. ஹிந்து மதம் கெட்டது என கூறவில்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஹிந்து மதத்தை நிறுவியது யார் என யாராவது கூற முடியுமா. இது தொடர்பாக ஹிந்து அமைப்பினர் என்னுடன் விவாதிப்பரா? இவ்வாறு அவர் பேசினார்.
1 hour(s) ago
1 hour(s) ago