உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆசிரியர்கள் தினவிழா

 ஆசிரியர்கள் தினவிழா

தங்கவயல்: தங்கவயல் வட்டார பள்ளிக் கல்வித்துறை சார்பில், ராபர்ட்சன்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, ஆசிரியர் தின விழா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது: சமூகத்தை நல்வழிப்படுத்தும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் அவர்களுக்கு சமூகத்தில் மரியாதை உள்ளது. குழந்தைகளின் திறமைகளை வளர்த்து, சிறந்த குடிமக்களாக உருவாக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. தங்களது பணியை சுயநலமின்றி செய்து வருவதால், நாம் அனைவரும் ஒரு சிறந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர்கள் சார்பில், பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. அரசு, அரசு மானியம் பெறும் பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்