உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண்ணுடன் உல்லாசம் வாலிபர் தலைமறைவு

பெண்ணுடன் உல்லாசம் வாலிபர் தலைமறைவு

டி.ஜே.ஹள்ளி: திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபவித்து, பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பெங்களூரு காவல்பைரசந்திராவை சேர்ந்தவர், 37 வயது பெண். இவருக்கு இரண்டு மகன்கள். கருத்து வேறுபாட்டால் கடந்த மார்ச் மாதம் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டது. ஹைதராபாதை சேர்ந்த ஷேக் முகமது, 34, என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக கூறி பெண்ணுடன், ஷேக் முகமது அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஐதராபாத் சென்று வருவதாக கூறி, ஷேக் முகமது சென்றார். பின், அவர் பெங்களூரு வரவில்லை. அவர் மீது நேற்று முன்தினம் டி.ஜே.ஹள்ளி போலீசில், அந்த பெண் புகார் அளித்தார். போலீசார், அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி