மேலும் செய்திகள்
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
பங்குச் சந்தை ஐ.பி.ஓ.,வில் தொடர்ந்து அப்ளை செய்து வருகிறேன். ஆனால், இதுநாள் வரை எனக்கு எந்த ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. ஐ.பி.ஓ., ஒதுக்கீடு கிடைக்கும் சாத்தியக் கூறுகளை அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும்?டி.ஆர்.துளசிராமன், பரமக்குடி, ராமநாதபுரம்.நீங்கள் மட்டும் இந்தப் படகில் இல்லை. இந்தியாவில் ஏராளமானோர் உங்கள் சக பயணியர் தான். அதுவும் நல்ல பங்கு, நியாயமான விலையில் வழங்கப்படுகிறது என்றால், டிமாண்டு அதிகம். எல்லா மட்டத்திலும் பல மடங்கு ஓவர் சப்ஸ்கிரைப் ஆகிறது. நிச்சயம் நமக்கு கிடைக்காது. ஐ.பி.ஓ.,வில் பங்குகள் ஒதுக்கீட்டுக்கு விதவிதமான சூத்திரங்கள் பயன்படுகின்றன. தற்போது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலாட்மென்ட் உத்தி கூட வந்து விட்டதாம். நான் அறிந்து ஓர் உத்தி உண்டு. ஒரு ஐ.பி.ஓ.,வில், ஒரு தனிநபர் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதுபோன்று, 2 லட்சம் ரூபாய் அளவுக்கு பங்குகள் கோரி விண்ணப்பித்து பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு பங்குகள் கிடைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். தற்போது வெளிவரும் பல நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்கள் எல்லாமே மிகவும் விலை அதிகமாக இருக்கின்றன. அந்நிறுவனங்களின் பி.இ., விகிதம், பிரைஸ் டு புக் வேல்யூ விகிதம் ஆகியவை எங்கோ விண்ணை முட்டி நிற்கின்றன. அதனால், அவசரப்படாமல் காத்திருங்கள்; நல்ல விலை வந்தவுடன் செகண்டரி மார்க்கெட்டில் வாங்கிப் போடுவதே புத்திசாலித்தனம்.நான் டிசம்பர் 23ல், வீட்டுக் கடன் வாங்கினேன். மத்திய - மாநில அரசு மானிய திட்டங்கள் ஏதேனும் தற்போது நடைமுறையில் இருக்கிறதா?பெயர் வெளியிட விரும்பாத வாசகி, தேனி.மத்திய அரசின் 'கிரெடிட் லிங்க்டு சப்ஸிடி ஸ்கீம்' எனப்படும் கடனோடு இணைந்த மானிய திட்டத்தின் கீழ், புதிய கடனுக்கான மானியங்கள் கடந்த மார்ச் 2022 உடன் முடிவுக்கு வந்துவிட்டன. சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டில், மத்திய தர வர்க்கத்தினரில் தகுதி உள்ளோர், புதிய வீடு வாங்குவதற்கோ, கட்டிக் கொள்வதற்கோ புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முழு பட்ஜெட் ஜூலை இறுதியில் தான் வெளிவரும். அதில் தான் தகுதியுள்ளவர்கள் யார்; ஆண்டு வருமானம் எவ்வளவாக இருக்க வேண்டும்; எவ்வளவு ரூபாய் மானியம் கொடுக்கப்படும்; ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டுக்கும் மானியம் உண்டா; புதிய திட்டங்களுக்கு தான் பொருந்துமா? என்பன போன்ற விபரங்கள் தெரிய வரும்.வாகன காப்பீடு திட்டத்தில், சந்தை விலையை கணக்கிட்டு பிரீமியம் வசூலிக்கும் காப்பீடு நிறுவனங்கள், வாகன சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்போது, முழு காப்பீடு தொகையை தராமல் இருப்பது மோசடி இல்லையா? இதற்கு சட்டமும் துணை போகிறதா?என்.சம்பத், சென்னை.வாகன காப்பீடு வாங்கும்போதே, அதில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டும், பல அம்சங்கள் விலக்கப்பட்டும் இருக்கும். இதற்கு மேல் ஒரு வாகனம் சேதம் அடைந்தால், அதை எத்தனை மணி நேரத்துக்குள் அல்லது நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு, பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஒரு வாகன சேதத்துக்கான இழப்பீடை நிராகரிப்பதற்கோ, குறைப்பதற்கோ கிட்டத்தட்ட 12 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்றது தான் வாகன இன்ஷூரன்சும். வாகனத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது நம் கடமை. சேதமானால், அதற்கு முழுத் தொகையும் ஈடாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இவையெல்லாம் முன்னதாகவே இன்ஷூரன்ஸ் வாங்கும்போது தெரிவிக்கப்பட்டு, கையெழுத்து வாங்கப்படுவதால், சட்ட ரீதியாகவும் இதில் பெரிய பரிகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. கவனமாக இருப்பது மட்டுமே இழப்பில் இருந்து காப்பாற்றும்.நாம் பணத்தை வங்கியில்முதலீடு செய்தால், அதை வங்கி பயன்படுத்திக் கொண்டு, நமக்கும் வட்டி தரும். அதுவே கோவில் நகை போன்றவற்றை கிலோ கணக்கில் உருக்கி, கட்டிகளாக்கி வங்கியில் முதலீடு செய்வதென்றால் எப்படி? அதனால் வங்கிக்கு என்ன பயன்? வெறும் தங்கக்கட்டிகளை அசையா சொத்தாக வைத்துக் கொண்டு, வங்கி எப்படி வருமானம் ஈட்டும்? நமக்கு எப்படி வட்டி தரும்? கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி.கோவில் நகைகளை எடுத்து வங்கிகளிடம் கொடுக்கலாமா, அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்றெல்லாம் விவாதம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, நகைகள் உருக்கப்பட்டு, 99.5 சதவீத துாய தங்கக் கட்டிகாக மாற்றப்படும். பின்னர் அவை, வங்கிகளிடம் குறுகிய கால அல்லது நீண்டகால டெபாசிட்டுகளாக வைக்கப்படும். குறுகிய கால வைப்புக்கு ஆண்டுக்கு 2.25 சதவீதமும், நீண்ட கால வைப்புக்கு ஆண்டொன்றுக்கு 2.50 சதவீத வட்டியும் கிடைக்கும்.உபரியாக, பயன்படுத்தப்படாத நகைகளை வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு வகையில் லாபம். அந்த நகை, வருவாய் ஈட்டிக் கொடுக்கும். அரசுக்கு பெரிய லாபம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு குறையும். உள்நாட்டில் ஆபரணங்களுக்காகத் தேவைப்படும் தங்கத்தை, இந்தத் திட்டத்தின் வாயிலாக, நகைக் கடைக்காரர்கள் வாங்கிக் கொள்ளலாம். பொதுத் துறை வங்கிகளின் வாயிலாக அரசே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், தங்கத்துக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ--மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph:98410 53881
12-Dec-2025
10-Dec-2025
04-Dec-2025