உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இரண்டே நாட்களில் முடிந்தது 5ஜி அலைக்கற்றை ஏலம்

இரண்டே நாட்களில் முடிந்தது 5ஜி அலைக்கற்றை ஏலம்

புதுடில்லி:'5ஜி' அலைக்கற்றைக்கான ஏலம், 11,340 கோடி ரூபாய் மதிப்புடன், இரண்டே நாட்களில் முடிவடைந்தது. மொபைல் போன்களுக்கான 5ஜி ஏலம், கடந்த செவ்வாயன்று துவங்கியது. இந்த ஏலத்தின் வாயிலாக, அரசுக்கு 96,238 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசின் இந்த மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும், 12 சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளது. 800 மெகா ஹெர்ட்ஸ் முதல் 26 ஜிகா ஹெர்ட்ஸ் வரையிலான மொத்தம் 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,340 கோடி ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏலத்தின் முதல் நாளான செவ்வாயன்று, ஐந்து சுற்று ஏலம் நடந்தது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று, முந்தைய நாளை விட ஆர்வம் குறைவாக இருந்த காரணத்தினால், காலை 11:30 மணிக்கே ஏலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.முதல் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தை விட, இரண்டாம் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தின் மதிப்பு கூடவும் இல்லை; குறையவும் இல்லை. மொத்தம் நடந்த ஏழு சுற்றுகளில் 140 முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 'ஏர்டெல்' நிறுவனம் 6,857 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் ஏழு நாட்கள் நடந்த ஏலத்தின் போது, 1.50 லட்சம் கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையானது.இதில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், அனைத்து ஏலங்களிலும் கிட்டத்தட்ட பாதியை எடுத்தது. அதன் மதிப்பு 88,078 கோடி ரூபாயாகும்.இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய்க்கும், வோடபோன் ஐடியா 18,799 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pattikkaattaan
ஜூன் 28, 2024 12:18

மாமியார் உடைத்தால் மண் குடம்.... மருமகள் உடைத்தால் பொன்குடம்... அவ்வளவுதான்


வல்லவன்
ஜூன் 27, 2024 17:01

2G Rs. 175000000000000 கோடி ஏலம் போகும் என்றவர்கள் 5G தம்மா துண்டு ரூபாய்க்குதான் ஏலம் போனதைப்பற்றி என்ன சொல்ல போகிறார்கள்


Arul Narayanan
ஜூன் 27, 2024 14:26

தேவை இருந்தால் தானே ஏலம் போகும்? இன்னும் 5ஜி பரவலாக உபயோகத்திற்கு வரவில்லை.


Sridhar
ஜூன் 27, 2024 11:59

திருட்டு பசங்க ஆட்சியில இருந்தப்போ அரசுக்கு வரும் தொகை குறைவாக இருந்தால் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மிச்ச தொகை அவர்கள் பாக்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இப்போது குறைவாக வந்தால் இந்த அரசு வருத்தப்படுகிறது. அதுதான் வித்தியாசம்.


Azar Mufeen
ஜூன் 27, 2024 08:19

2ஜில இழப்பீட்டு தொகையை ஊழல் என்று சொன்னார்கள், இப்போ 5ஜி 85ஆயிரம் கோடி இழப்பீடு எல்லா கட்சிகளும் ஒன்றுதான்


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 11:44

ஊழல்? முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சுப்ரீம் கோர்ட் ராசா ஒதுக்கிய எல்லா 2 ஜி லைசென்ஸ்களையும் கேன்சல் செய்துவிட்டது தெரியுமா? 5 ஜி யில் சந்தேகமிருந்தால் வழக்கு போடலாம். இப்போது குறைந்துள்ளது டேட்டா விலைக்கு இந்த ஏலத் தொகை நியாயமே.


samikkan chinnaveeran
ஜூன் 27, 2024 07:26

என்ன ஒரு திருப்பம் 2 ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக எல்லோரும் சொன்னார்கள்.. இப்போது 5 ஜி அலைக்கற்றையிலும் ஊழல் நடந்திருப்பதாக நம்புகிறேன்


samikkan chinnaveeran
ஜூன் 27, 2024 07:24

I thought we would get more than 1.85 lacks crore from this auction... So disappointed..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை