உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பேம் 3 திட்டம் விரைவில் அறிமுகம்

பேம் 3 திட்டம் விரைவில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்சார வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 'பேம்' திட்டத்தின் மூன்றாம் கட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி., குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில், மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, கடந்த 2015ம் ஆண்டு, மத்திய அரசால் பேம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வாகனத் துறையினரிடமிருந்து, இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக அமைச்சர் தெரிவித்ததாவது:பேம் 3 திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அமைச்சகங்களும் இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து பரிந்துரைகள் வழங்கியுள்ளன. அடுத்த சில நாட்கள் அல்லது மாதங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். எனினும், மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளிவராது.ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரியை குறைப்பது குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற பிறகே முடிவெடுக்கப் படும். இதுகுறித்து, நிதி அமைச்சகமும் விவாதிக்கும். 'டெஸ்லா' நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து, இதுவரை எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை.மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வாயிலாக, நம் நாடு பெரிய அளவில் பயனடைய உள்ளது. இது பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இத்துறையில் உள்ள சவால்களைக் கையாளவும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.விரைவில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனினும், பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு எதுவும் இருக்காது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை