உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தோவாளை பூ விலை சரிவு

தோவாளை பூ விலை சரிவு

நாகர்கோவில்:தோவாளை பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, இந்த மாதம் பூக்களின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. முகூர்த்த தினம், கோவில் திருவிழாக்கள் குறைந்த நிலையில், பூக்களின் தேவை குறைந்துள்ளதால், இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.கிலோ பிச்சி, மல்லி பூக்கள் கடந்த மாதம் 1,800 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது, 250 ரூபாயாக சரிந்துள்ளது. சம்பங்கி, கனகாம்பரம் பூக்கள், கிலோ 150 ரூபாய்க்கும், கொழுந்து மரிக்கொழுந்து போன்றவை, கிலோ 120 ரூபாய்க்கும், செவ்வந்தி பூக்கள் கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை