உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 4 மாத உயர்வில் பாமாயில் இறக்குமதி

4 மாத உயர்வில் பாமாயில் இறக்குமதி

புதுடில்லி: கடந்த மே மாதம், நாட்டின் பாமாயில் இறக்குமதி, முந்தைய மாதத்தை விட 11.60 சதவீதம் உயர்ந்து, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உயர்வை எட்டியுள்ளதாக, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் தெரிவித்து இருப்பதாவது: பாமாயில் இறக்குமதி, கடந்த மே மாதத்தில், முந்தைய மாதத்தை விட 11.60 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உயர்வாகும். விலை குறைந்துள்ளதால், கொள்முதல் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. மே மாதம் மொத்தம் 7.63 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்திற்கு பின், மிக அதிகமாகும். சோயா எண்ணெய் இறக்குமதி 16 சதவீதம் சரிந்து உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 75 சதவீதம் சரிந்துள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 16 சதவீதம் அதிகரித்து, 15 லட்சம் டன்னாக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை