உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒரே விகிதத்தில் ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி., வசூலிக்க கோரிக்கை

ஒரே விகிதத்தில் ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி., வசூலிக்க கோரிக்கை

புதுடில்லி:ஹோட்டல்களில் ஒரே மாதிரியாக, 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை, பயணங்கள் மற்றும் சுற்றுலா சேவைத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, 'மேக் மை ட்ரிப்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் மகோவ் கூறியதாவது: சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், வருகிற 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ஹோட்டல்களில் ஒரே மாதிரியாக 12 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும். ஹோட்டல் அறைகளுக்கான ஜி.எஸ்.டி., விகிதம், தேவை மற்றும் 'பீக் சீசன்' அடிப்படையில், ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. அதாவது சீசன் நேரத்தில், ஒரு அறையின் வாடகை 10,000 ரூபாய்க்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யும், சீசன் இல்லாத நேரத்தில் ஒரு அறையின் வாடகை 7,000 ரூபாய்க்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி., என்ற விகிதத்தின் கீழும் உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, ஒரே மாதிரியாக 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை விதிப்பது குறித்து, வருகிற பட்ஜெட்டில் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.விருந்தோம்பல் துறைக்கான தற்போதைய ஜி.எஸ்.டி., விகிதங்கள், உலகளவில் மிக அதிகமாக இந்தியாவில் உள்ளதாகவும்; இது சுற்றுலாவிற்கான செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது என்றும், இத்தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். சீசன் நேரத்தில் அறை வாடகை அதிகரிக்கும்போது, ஜி.எஸ்.டி., விகிதமும் கூடிவிடுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை