உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  9 மாதங்களில் 50 சர்வதேச திறன் மையங்கள்

 9 மாதங்களில் 50 சர்வதேச திறன் மையங்கள்

சென்னை சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பம், வணிக செயல்பாடு போன்றவற்றுக்கு 'குளோபல் கேபபிலிட்டி சென்டர்' எனப்படும் சர்வதேச திறன் மையங்களை அமைக்கின்றன. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் நிதி, காப்பீடு, லாஜிஸ்டிக்ஸ், இன்ஜினியரிங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள, 50 நிறுவனங்கள், சர்வதேச திறன் மையங்களை அமைத்துள்ளன. அதில், 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பெடெக்ஸ், வொர்க்டே' உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள், 80 லட்சம் சதுர அடிக்கு மேல் அலுவலக இடங்களை உருவாக்கியுள்ளன. தற்போது, தமிழகத்தில் மொத்தம், 320 சர்வதேச திறன் மையங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை