உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு மைல்கற்கள்: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு மைல்கற்கள்: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக, சஞ்சய குமார் மிஸ்ராவுக்கு நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை கடந்ததன் வாயிலாக, ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.மத்திய அரசு, ஜி.எஸ்.டி., முறையை அமல்படுத்துவதில், ஏழைகளுக்கு ஆதரவான அணுகுமுறையையே பின்பற்றியது. ஜி.எஸ்.டி., முறையில் வரி விகிதம் குறைவாக உள்ள போதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில், அதன் வருவாயின் பங்கு, ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய அளவை எட்டியுள்ளது.கடந்த 2018 - 19ம் நிதியாண்டு முதல் 2023 - 24 நிதியாண்டு வரை, ஜி.எஸ்.டி., வாயிலான மாநிலங்களின் வருவாய் 46.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய நடைமுறையில், இது 37.50 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்திருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

MADHAVAN
மே 08, 2024 11:55

நாட்டைவிட்டு துரத்தும் நாள் வந்துவிட்டது,


K.n. Dhasarathan
மே 07, 2024 21:18

பேரிடர் அம்மையாரே அரிசிக்கு வரி , சாப்பாடு க்கு வரி , என்னை நிறுவனங்களே குறைத்தாலும் பெட்ரோல் டீசலுக்கு உண்மையான விலை வரவில்லை, கொள்ளை வரி போட்டு போலியான,கூடுதலான விலை எல்லாம் இருந்தால் ஜிஎஸ்டீ வரி கூடத்தான் செய்யும், இதில் என்ன பெருமை ? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? தமிழக மக்களை ஏமாற்றிவிட்டீர்கள், மன்னிக்கவே மாட்டார்கள்


A.Gomathinayagam
மே 07, 2024 14:15

வரி வசூல் உயர்கிறது சாமானியனின் வாழ்க்கை தரம் மட்டும் உயரவில்லை


MADHAVAN
மே 07, 2024 13:45

மக்களின் பணத்தை கொள்ளையடிக்க இன்னும் எத்துணை வரிகள் போடபோறங்கனு தெரியல, எனக்கு ஜிஎஸ்டி பணம் பத்தி மூணு லட்சம் ருபாய் கிளைம் பண்ணி மூணுமாசம் ஆகுது, இன்னும் வரவில்லை,


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 13:04

ஏற்கனவே இருந்த சேல்ஸ் சேவை வரிகள் ஒன்றிணைக்க பட்டது தான் GST இதனால் மத்திய மாநில வரிகள் தனி தனியாக கட்ட வேண்டியதில்லை இதற்கு ஒவ்வொரு மாநில நிதியமைச்சர் உறுப்பினர் அவ்வப்போது இதில் வெவேறு நிதியமைச்சர்களின் பரிந்துரை ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் வருகின்றது இவை பல circular மூலம் பிரதி மாசம் மாறுகிறது அவை ஆன்லைனில் வர ஒரு சில தினம் ஆகிறது மாசாந்திர return சமர்பித்தலில் இதனால் கணக்காயர்கள் மிக அவதிக்குள்ளாவதாக எண்ணுகிறார்கள் தொடர்ந்து GST செலுத்துபவர்களுக்கு எதிர்மறை தகவல்கள் தந்து கொண்டே இருக்கிறார்கள் மற்றபடி விலைவாசி ஏற்றத்துக்கும் GST க்கும் தொடர்பில்லை பல விற்பனையாளர்கள் குறிப்பாக உணவு தொழில் தமது வாடிக்கையாளர்களை GST தவறான முறையில் போட்டு ஏமாற்றும் நிலையை அரசு கவனித்தால் போதும் GST யால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது


Varadarajan Nagarajan
மே 07, 2024 12:55

இந்த ஒருமுனை வரி விதிப்பு முறையில் அரசுக்கு முறையாக வருமானம் கிடைக்கின்றது முன்பெல்லாம் Excise Duty, Central Tax, Cess என மத்திய அரசும், Sales Tax என மாநில அரசும் பலமுனை வரி விதிப்பு இருந்த பொழுது மொத்தமாக வரி செலுத்தியது எவ்வளவு என மக்களுக்கு தெரியவில்லை அவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு அதற்க்கு இணையாக ஒரு பொருளை நுகர்வோர் வாங்கும்பொழுது ஒரே இடத்தில் வரி எழுத்துவதால் அதிகம் போல மக்களுக்கு தோன்றுகின்றது உண்மை அதுவல்ல தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் வராத மதுபானங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களுக்கு மக்கள் மொத்தமாக எவ்வளவு வரி காட்டுகின்றார்கள் என தெரியுமா? அவைகளில் வரி அதிகம் இருப்பதால்தான் மாநில அரசு அவற்றை ஜிஎஸ்டி யின் கொண்டுவர மறுக்கின்றது வரி வருவாயை ஜிஎஸ்டி கவுன்சில் எல்ல மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளிக்கின்றது


Apposthalan samlin
மே 07, 2024 11:19

இந்த gst ஆல் மக்களின் வாழ்வாதாரம் பாழாய் போனது தான் மிச்சம் விலை வாசி வினை தொட்டு விட்டது


ஆரூர் ரங்
மே 07, 2024 11:53

ஆனால் மிஷன் என்ஜிஓக்களின் அன்னிய வரும்படி குறைந்து உங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது புரிகிறது.


G.jayalakshmi
மே 07, 2024 10:25

அப்படியா?


karthik
மே 07, 2024 11:30

வேற எப்படி?


sahayadhas
மே 07, 2024 09:43

இத்தனை வருமானம் வந்தும் இந்தியா கரன்சி down


ஆரூர் ரங்
மே 07, 2024 11:33

எந்தெந்த நாட்டு கரன்சி மதிப்பு ஏறியுள்ளன? எல்லாமே கீழ் நோக்கி. டாலருடன் ஒப்பிடும் மனநிலை மாற வேண்டும்.


RAAJ68
மே 07, 2024 08:17

சாப்பாட்டு அரிசி விலை கிலோ 65 ரூபாய் 70 ரூபாய் ..... இதுதான் உங்கள் சாதனை


ஆரூர் ரங்
மே 07, 2024 09:41

நெல் சாகுபடிப் பரப்பளவு உயர்ந்தும் அரிசி விலை உயர்ந்துள்ளது விடியல் மாநில கொள்ளையர்களின் கட்டிங் சாதனை. ஒவ்வொரு ரைஸ் மில்லிடமும் அரை கோடிக்கு குறையாமல்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை