உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் வட்டி உயர்வு

17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் வட்டி உயர்வு

புதுடில்லி:ஜப்பான் மத்திய வங்கி, 17 ஆண்டுகளுக்கு பின், அதன் வட்டி விகிதத்தை முதன் முறையாக உயர்த்தியுள்ளது.குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0 முதல் 0.1 சதவீதமாக, ஜப்பான் மத்திய வங்கி உயர்த்தி உள்ளது. முன்னதாக கடந்த 2016 முதல், எட்டு ஆண்டுகளாக இது மைனஸ் 0.1 சதவீதத்தில் இருந்தது.வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்திய நிறுவனங்கள், ஜப்பானில் இருந்து கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து, 'ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ்' தலைமை முதலீடு ஆலோசகர் வி.கே. விஜயகுமார் தெரிவித்துள்ளதாவது:ஜப்பான் மத்திய வங்கியின் வட்டி விகித கொள்கை, இந்திய சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.கடன் சேவை மற்றும் உள்கட்டமைப்பு கடன்களில், இதன் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும். வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின், ஜப்பான் யென் சரிந்ததே அதற்கு சான்று.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை