UPDATED : ஜன 19, 2024 05:01 PM | ADDED : ஜன 17, 2024 12:13 AM
புதுடில்லி : இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்துக்கான ஒரு மெகா ஆர்டரை பெற்றுள்ளதாக எல் அண்டு டி., நிறுவனம் தெரிவித்துள்ளது.எல் அண்டு டி., நிறுவனத்தின் கட்டுமான பிரிவான, 'எல் அண்டு டி., கன்ஸ்டிரக்ஷன்' நிறுவனம், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்துக்கான மின்மயமாக்கல் அமைப்பை நிறுவுவதற்கான மெகா ஆர்டரை, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.அதன்படி, மும்பை முதல் ஆமதாபாத் வரையிலான புல்லட் ரயில் அல்லது அதிவிரைவு ரயில் திட்டத்தில், 508 கி.மீ., தொலைவுக்கு, அதிவிரைவு மின்மயமாக்கல் அமைப்பை உருவாக்க உள்ளது.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சி, இத்திட்டத்திற்கு நிதி அளிக்க உள்ளது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் சார்பாக செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஜப்பானிய ஏஜன்சி, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இதற்கான கட்டுமானம் முடிந்த பின், ரயில்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.