உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பொதுத்துறை வங்கி குறியீடு 3 மாதங்களில் 27% உயர்வு

 பொதுத்துறை வங்கி குறியீடு 3 மாதங்களில் 27% உயர்வு

பொ துத்துறை வங்கிகளின் பங்கு விலை நேற்றும் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து, நிப்டி பொதுத்துறை வங்கி குறியீடு புதிய உச்சத்தை எட்டியது. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே நிப்டி பி.எஸ்.யு., குறியீடு 2 சதவீதம் உயர்ந்து 8,665.20 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. இக்குறியீடு கடந்த இரண்டு நாட்களில் நான்கு சதவீதமும்; மூன்று மாதங்களில் 27 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நிப்டி 50 குறியீடு, கடந்த மூன்று மாதங்களில் 5.60 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே, எஸ்.பி.ஐ., பங்கு விலை 999 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலையும் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன. வீட்டுக் கடன் சந்தையில், பொதுத்துறை வங்கிகளின் பங்கு அதிகரித்துள்ளதோடு, வாராக் கடன் குறைந்து வருவதாக சமீ பத்திய தனியார் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை