உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.11,000 கோடி திரட்டிய சிறு, நடுத்தர நிறுவனங்கள்

ரூ.11,000 கோடி திரட்டிய சிறு, நடுத்தர நிறுவனங்கள்

கோல்கட்டா: மூலதன சந்தையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.கோல்கட்டாவில் சி.ஐ.ஐ., அமைப்பு நடத்திய ஒருங்கிணைந்த மூலதன சந்தை மாநாட்டில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிதிச்சந்தை பிரிவின் இயக்குனர் சேகர் சவுத்ரி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:கடந்த ஜூன் நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகளில், 780 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. பங்குச் சந்தையில், சிறு, நடுத்தர நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்கு, மூலதன சந்தை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை