மேலும் செய்திகள்
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
47 minutes ago
பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு தேசிய தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவருக்கு, லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க பா.ஜ., பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.அப்போது, பல பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கோல்கட்டாவைச் சேர்ந்த வக்கீல் ஒருவருக்கு அமித் மாளவியா 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வும், டில்லி சட்டசபை துணை சபாநாயகருமான ராக்கி பிர்லா தலைமையிலான அக்கட்சியின் மகளிர் எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர், அமித் மாளவியா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.,க்கள் பிரமிளா டோகாஸ், வந்தனா குமாரி, ப்ரீத்தி தோமர், கட்சியின் மகளிர் பிரிவு டில்லி மாநிலத் தலைவி சரிகா சவுத்ரி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
47 minutes ago