உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  

அதிகாரிகள் தொல்லையால்  பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி  

ஷிவமொகா: அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர், பஸ்சில் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.தாவணகெரேயை சேர்ந்தவர் பசவராஜ், 38. கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட, ஒன்னாளி போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்கிறார். ஒன்னாளி - ஷிவமொகா அரசு பஸ்சை இயக்குகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு, ஷிவமொகா பஸ் நிலையத்தில் பஸ் நின்றது. பயணியர் பஸ்சுக்குள் ஏறிய போது, வாயில் நுரைதள்ளிய நிலையில், பசவராஜ் மயங்கி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த பயணியர் அவரை மீட்டு, ஷிவமொகா மெக்கான் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பசவராஜ் விபத்து ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு பணிமனை அதிகாரிகள், மெமோ கொடுத்து இருந்தனர். அதன்பின்னரும் தொடர்ந்து, அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் மனம் உடைந்த பசவராஜ், தற்கொலைக்கு முயன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். ஷிவமொகா டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை