மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
2 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
2 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago
மைசூரின் சாமுண்டி மலையில் குடி கொண்டு, அருள்பாலிக்கும் சாமுண்டீஸ்வரியை அனைவருக்கும் தெரியும். இவரது சகோதரியான மாரம்மாவும், சக்தி வாய்ந்த அம்மன். கேட்ட வரம் அளிப்பவர்.மைசூரின் சாமுண்டி மலையில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரிக்கு, உலகம் முழுதும் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். கர்நாடக மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். ரத்த துளி
தேவர்களை இம்சித்த மகிஷாசுரனை வதம் செய்ய, சாமுண்டீஸ்வரி அவதரித்தார். அசுரனை வதம் செய்த போது, ஒவ்வொரு ரத்த துளியில் இருந்தும், அசுரன் உருவாகிறான்.அப்போது சாமுண்டீஸ்வரியின் வியர்வையில் இருந்து தோன்றியவர் உத்தனஹள்ளி மாரம்மா.இவர் தன் நாக்கை நீட்டி, மகிஷாசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல் குடிக்கிறார். அதன்பின் அசுரனை சாமுண்டீஸ்வரி வதம் செய்ததாக, புராணங்கள் கூறுகின்றன. இந்த அம்மனை 'ஸ்வாலாமுகி திரிபுர சுந்தரி' என்று அழைக்கின்றனர்.தன் தங்கை வேறு எங்கும் செல்லாமல், தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என, சாமுண்டீஸ்வரி விரும்பினார். இதன்படி சாமுண்டி மலை பக்கத்திலேயே, உத்தனஹள்ளி மாரம்மா குடிகொண்டார்.சாமுண்டி மலை எப்படி உள்ளதோ, அதே போன்று உத்தனஹள்ளி கிராமத்தில், மாரம்மாவுக்காக மலையை சாமுண்டீஸ்வரி உருவாக்கினார். தசரா காலம்
பக்தர்கள் செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டுளன. இவற்றில் ஏறி சென்றால், கோவிலை அடையலாம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, மாரம்மாவை தரிசிக்கின்றனர். சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். தசரா நேரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர்.சுற்றிலும் இயற்கை காட்சிகளுக்கு நடுவில், கோவில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள், இங்கு வந்து மாரம்மாவை தரிசித்தால், மனம் நிம்மதி அடையும். கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நமது நிருபர் -
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago