உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெப்பக்காற்று வீசுவதால் வெளியே வராதீர்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை

வெப்பக்காற்று வீசுவதால் வெளியே வராதீர்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை

பெங்களூரு : 'கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசுவதால், காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள்' என, பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசுகிறது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.'வரும் நாட்களில் அனல் காற்று அதிகம் இருக்கும். மூத்த குடிமக்கள், சிறார்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், ராய்ச்சூர், பாகல்கோட், கதக், பெலகாவி, ஹாவேரி, கொப்பால், பல்லாரி, விஜயநகரா மாவட்டங்களில் அனல் காற்றின் தீவிரம் அதிகம் இருக்கும். இந்த மாவட்டங்களுடன், தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு, கோலார், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கபல்லாபூரிலும் வெப்பக்காற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.தங்களின் ஆரோக்கியத்தில், மக்கள் கவனம் செலுத்துவது நல்லது. வெப்பக்காற்று வீசும் மாவட்டங்களில், 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மூத்த குடிமக்கள், சிறார்கள், கர்ப்பிணியர் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். இவர்களுக்கு 'சன் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் உள்ளது.பல மாவட்டங்களில், வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில், வெப்ப நிலை 40 டிகிரி செல்ஷியஸை தாண்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ