உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., அணை பாதுகாப்பு; கர்நாடகா உயர்நீதிமன்றம் கவலை

கே.ஆர்.எஸ்., அணை பாதுகாப்பு; கர்நாடகா உயர்நீதிமன்றம் கவலை

பெங்களூரு : 'கே.ஆர்.எஸ்., அணைக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது' என, கர்நாடக உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்து உள்ளது.மாண்டியா கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி, ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. அங்கு பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும், சக்தி வாய்ந்த வெடிகளால், அணைக்கு பாதிப்பு ஏற்படுவதாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அணையை சுற்றி 20 கி.மீ., துாரத்திற்கு, கல்குவாரிகள் செயல்பட தடை விதித்தது.இந்நிலையில் கே.ஆர்.எஸ்., அணை அருகே இருந்த, மஞ்சம்மாதேவி என்ற கல்குவாரி செயல்பட தடை விதித்து, கர்நாடகா கல்குவாரி உரிமம் மற்றும் கட்டுப்பாடு ஆணையம், கடந்த ஜனவரி 20ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்குவாரி உரிமையாளர் அசோக் கவுடா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ''எங்கள் கல்குவாரி கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 20 கிலோ மீட்டருக்கு வெளியில் இருக்கிறது. பாறைகளை தகர்க்க சட்டவிரோதமாக வெடி வைக்கவில்லை. இதனால் கல்குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும்,'' என கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் அமர்வு விசாரித்தது. நேற்று நடந்த விசாரணையின்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பாலகிருஷ்ணா, அரசு சார்பில் வக்கீல் மகேந்திரா வாதிட்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், ''கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி 20 கிலோ மீட்டர் துாரம், அதற்கு அப்பால் உள்ள கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க வெடிவைக்க, கர்நாடகா அணைகள் பாதுகாப்பு குழுவிடம் முறையிட வேண்டும். இந்த விவகாரத்தில் அணைகள் பாதுகாப்பு குழு எடுக்கும் முடிவே இறுதியானது. முடிவு எடுப்பதற்கு நீதிமன்றம் நிபுணர் இல்லை,'' என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் நீதிபதிகள் கூறுகையில், கே.ஆர்.எஸ்., அணையை சுற்றியுள்ள கல்குவாரிகளின் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை. இதனால் அணைக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய, நிலை இன்று ஏற்பட்டு உள்ளது என கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை