மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
2 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
2 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago
மங்களூரு: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தட்சிண கன்னடா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.தட்சிண கன்னடாவின் பண்ட்வால் மஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜித்குமார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி விஜித்குமார், அவரது நண்பர் அபிஜித்தை முஸ்லிம் வாலிபர்கள் சிலர் தாக்கினர்.இதனால் கோபத்தில் இருந்த விஜித்குமார், அபிஜித் ஆகிய இருவரும் தனது நண்பர்களான கிரண், அனிசுடன் சேர்ந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, யாராவது ஒருவரை தாக்க திட்டமிட்டு இருந்தனர்.கடந்த 2015 ஆகஸ்ட் 6ல், ஆட்டோ டிரைவரான முகமது நசீர் என்பவரை, நான்கு பேரும் சேர்ந்து, ஆயுதங்களால் தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். பண்ட்வால் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.இவர்கள் மீது தட்சிண கன்னடா முதலாவது மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை, கடந்த மாதம் நிறைவு பெற்றது.நான்கு பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி மல்லிகார்ஜுன சாமி அறிவித்தார். நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கொலை செய்யப்பட்ட முகமது நசீர் மனைவி ரமலத்துக்கு வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago