உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் குரல் ஒடுக்கப்படுவதை ஏற்கமாட்டோம். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவது சாத்தியமற்ற ஒன்று. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh.M
ஜூன் 09, 2024 23:34

உனக்கெல்லாம் கேவலமா தெரியல இதெல்லாம்? ஜூன் 3 ம் தியதி வரை EVM மெஷினை குறை சொன்னீர்கள்.. இப்போ எவனும் அத பற்றி வாய திறக்க காணோம்.. இப்போ புதுசா... நீட் பற்றி குறை சொல்றாரு... இப்பிடியே அடுத்த அஞ்சு வருஷத்த ஓட்ட வேண்டியது தான்...நீங்க அள்ளி விட்ட புழுக நம்பி ஒரு கூட்டம் ஒட்டு போட்டிருக்கு உங்களுக்கு.. அது தான் அந்த 1 லக்ஷம் இலவசம் வாக்குறுதி... அதுல பாருங்க பப்பு. காமெடி என்னன்னா . உங்களுக்கு 200 சதவிகிதம் தெரியும் நீங்க அம்மி கும்மி கைலாசம் மறிஞ்சாலும் ஆட்சிக்கு வர போவது இல்லை என்று. அதனால் தான் அப்படி ஒரு பொய் வாக்குறுதி கொடுத்தீர்கள்... ஆனால் பிஜேபி க்கு தெரியும் அவங்க கண்டிப்பா ஆட்சிக்கு வருவாங்க என்று. அதனால் தான் அவங்க எந்த பொய் வாக்குறுதியும் கொடுக்கல... ஆனா பாவம் சோம்பேறி மக்கள் உங்கள நம்பி ஓட்ட போட்டாங்க... ஹிஹிஹிஹி .....


என்றும் இந்தியன்
ஜூன் 09, 2024 21:17

அப்போ எம்பிக்கு எதற்கு தேர்தல் அதிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன ஆகவே அதை முதலில் நிறுத்தவேண்டும், என்ன பப்பு அதையும் சொல்லேன்


M.S.Jayagopal
ஜூன் 09, 2024 19:20

ராஹுல்காந்தி வழக்கத்தைவிட அதிகமாக இப்பொழுது ஆட்டம் போடுவார். கூடியவிரைவில் அவரது கூட்டணி கட்சி தலைவர்களாலேயே அவர் அவமானப்படுத்தப்படுவார்.அவரை அவர் கட்சியினர் தவிர வேறு யாரும் விரும்புவது இல்லை.


கணபதி
ஜூன் 09, 2024 15:50

நேஷனல் ஹெரால்டு கேசுல உடன்படிக்கை செய்யும்போது இதுமட்டும் எப்படி ஊழலாகும்?


iniyavan
ஜூன் 09, 2024 22:48

சி.ஏ.ஜி கண்டு பிடித்த சாலை ஊழல் குறித்து வாய் திறவா மந்தைகள் தேர்தல் முடிந்த அடுத்த நாளே டோல் கட்டணம் ஏற்றும் மக்கள் நல அரசு


sri
ஜூன் 09, 2024 15:49

NTA க்கு கடிவாளம் போடவேண்டும்


Kumar Kumzi
ஜூன் 09, 2024 22:36

உன்னை போன்ற கொத்தடிமைகள் இன்பநிதிக்கும் போஸ்டர் தாண் ஓட்டணும்


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 15:47

நீட் தேர்வு சட்ட முன்வடிவை குலாம் நபி ஆசாத்தை விட்டு பார்லிமெண்டில் அறிமுகப்படுத்த கூறியதே காங்கிரசு தலைமைதான். அதுக்கு ஒத்து ஊதியது திமுக அமைச்சர் காந்திசெல்வன். அதுக்குள்ள மறந்து போச்சா?


GMM
ஜூன் 09, 2024 15:28

பாராளுமன்றம் கொள்கை பரிந்துரை செய்யும் இடம். சட்ட குறைபாட்டை சீர் செய்யும் இடம். பழைய சட்டங்கள் நீக்கும் இடம். CAG தணிக்கை தடை விவாதிக்கும் இடம். கட்சி விளம்பர நிறுவனம் அல்ல. நீட் வினா கசிவு, பங்கு சரிவு, ஒரு லட்சம் இலவசம், ஒரு பட்டன் இரு ஓட்டு, தேர்தல் ஆணையம் மீது மலை போல் எதிர் கட்சிகள் புகார் .. . போன்ற பல நிகழ்வுகள் விவாதிக்கும் இடமா ராகுல்? ஆளும் கட்சி விரைவு, தெளிவு, உறுதி செய்து முடிவு எடுக்க வேண்டும். கூச்சல், வெளிநடப்பு நாடகம் போதும். மக்கள் மன நிலை மாறி வருகிறது. வினாதாள் கசிவு தடுப்பிற்கு ராகுல் கொடுக்கும் தீர்வு என்ன? தீர்வு சொல்லவில்லை


HoneyBee
ஜூன் 09, 2024 14:49

அடப்பாவமே.. முதலில் நளினி சிதம்பரம் கிட்ட கேட்டு விட்டு பிறகு குரல் எழுபுங்க பப்பு


தமிழ்வேள்
ஜூன் 09, 2024 14:03

திமுகவோடு சேர்ந்த உனக்கு கண்டதற்கும் போராட்டம் நடத்தும் வெட்டி ரகளை புத்தி மட்டும்தான் வரும்..


kannan
ஜூன் 09, 2024 13:56

நீட் தேர்வு ரத்து செய்ய ராகுல் சொல்லவில்லை. முறை கேடு பற்றி முறையிடுவேன் என்கிறார். கண்ணன் சென்னை


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 20:15

அப்போ நீட் தேர்வு ரத்து செய்ய தேவையில்லை என்று....உங்கள் புள்ளி வைத்த இண்டி கூட்டணி விடியல் தலைவரிடம் சொல்லாலமே !!!


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி