உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைசா பாக்கியின்றி கர்நாடகத்துக்கு நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பைசா பாக்கியின்றி கர்நாடகத்துக்கு நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பெங்களூரு: ''கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு ஒருபைசா பாக்கி இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில், மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.'கர்நாடகாவுக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதி வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் கீழ் எங்கள் சட்டப்பூர்வ உரிமையை பயன்படுத்தி உள்ளோம்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பெங்களூரில் நேற்று சிந்தனையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கர்நாடகாவுக்கு 5,495 கோடி ரூபாய் சிறப்பு மானியம் எதுவும் வழங்கவில்லை என்பது முற்றிலும் தவறான தகவல். நிதி ஆயோக் தனது இறுதி அறிக்கையில், அத்தகைய சிறப்பு மானியம் எதையும் காங்கிரஸ் அரசு பரிந்துரைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. கர்நாடகாவுக்கு வரவேண்டிய ஒவ்வொரு பைசாவும் கணக்கிடப்பட்டு, உரிய நேரத்தில் விடுவிக்கப்பட்டது.'பிரதான் கரீப் கல்யாண அன்ன திட்டத்தின்' கீழ், நாடு முழுதும் 80 கோடி மக்களும், பெங்களூரு நகரில் 30.5 லட்சம் மக்களும் ஒவ்வொரு மாதமும் இலவச ரேஷன் பெறுகின்றனர். சாமானிய மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு உதவுவதற்காக நாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூற விரும்புகிறேன்.நாடு முழுதும் 52 கோடி ஜன்தன் கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில், பெங்களூரில் 14.68 லட்சம் கணக்குகள் உள்ளன. மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், பெங்களூரு நகருக்கு 30 ஆயிரத்து 490 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.பெங்களூரு நகரில் மட்டும் முத்ரா திட்டத்தில், 38.25 லட்சம் பயனாளிகள் உள்ளனர். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், மாநிலத்தில் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் திட்டம் மூலம், 467 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் மட்டும் 4,429 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.தெருவோர வியாபாரிகள் பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரில் 1.25 லட்சம் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதில், 62 சதவீதம் பெண்களும்; 31 சதவீதம் ஓ.பி.சி., பிரிவினரும்; 29 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரும் பயனடைந்து உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை