உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் திஹார் சிறை சென்றார் கெஜ்ரிவால்

மீண்டும் திஹார் சிறை சென்றார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை. தேசம் தான் முக்கியம் என திஹார் சிறையில் சரணடைய உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து திஹார் சிறை சென்று சரணடைந்தார்.டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் இன்றுடன் (ஜூன் 02) நிறைவடைந்தது. இதனால் கெஜ்ரிவால் திஹார் சிறையில் சரணடைய புறப்பட்டார். காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், தனது மனைவியுடன் கன்னாட் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ha9y8hy0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தியாகம்

அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது: என் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை. தேசம் தான் முக்கியம். 21 நாட்களில் ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கவில்லை. சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக நான் மீண்டும் சிறை செல்கிறேன். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவேன். எனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்வேன். என்னை(கெஜ்ரிவாலை) திறமையான திருடன் என்கிறார் பிரதமர் மோடி.

கருத்து கணிப்புகள்

அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவறானது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஒரு ஆதாரத்தையாவது அமலாக்கத்துறையால் சமர்பிக்க முடியுமா?. என் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு சென்று சரணடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Chandhra Mouleeswaran MK
ஜூன் 03, 2024 21:07

காலிஸ்தான் களவாணிகளைச் சுதந்திரமாக ஆடவிடுவதற்காக வாங்கிக் கொண்ட 179 கோடிகளை மரியாதையாக அரசுக் கருவூலத்தில் ஒப்படையுமேன் கேஜ்ரிவாலு விளக்குமாறு ஏந்திய கிளார்க்கு, ஊழலிற்கு எதிராகக் கிளம்பிய புயல், ஏன் தமிழகத் திமுகவின் சாராயக் கொள்கையை அரவணைத்துக் கொண்டு 35 ஆயிர்ம் கோடி சுருட்டியது?


Kuppan
ஜூன் 03, 2024 19:01

டெல்லியின் தீவிர தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பயந்தே ஜாமீனுக்காக மேலும் உயர் நீதி / உச்ச நீதி மன்றம் செல்லாமல் சிறையில் பதுங்க முடிவு செய்தது போல் உள்ளது, கேட்டா நீதி மன்றம் ஜூன் 2ல் மீண்டும் சிறை செல்ல சொல்லியது பிஜேபி ஒழிக அப்படினு உள்ளே போனது என்று தெரிகிறது


Azar Mufeen
ஜூன் 03, 2024 14:15

அய்யா நீங்க வெளியில் வந்து 6000கோடி ஊழல் செய்த பிஜேபி கவுன்சிலர்களை தண்டிக்க வேண்டும்


Dharmavaan
ஜூன் 03, 2024 07:46

மூடர்கள் இவன் நாடகத்தை நம்பி ஒட்டு போடுவதே கேவலம். இன்னும் இந்த புத்தி தமிழ் நாட்டுக்கு வரவில்லை


Dharmavaan
ஜூன் 03, 2024 07:31

திருடன் தியாகி வேடம் போடுகிறான் அனுதாபத்தை வேண்டி .தன வீட்டு குழாய் ரிப்பர் செய்ய 28 கோடி ,வீட்டை மாற்ற 48 கோடி என்றால் எப்பேர்ப்பட்ட திருடன் கபட நாடகம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்


Kumar Kumzi
ஜூன் 03, 2024 01:24

அண்ணா ஹசாரே கிட்ட இருந்து கட்சியை ஆட்டைய மாபெரும் திருடன் கடைசி வரை களி திண்ணனும்


subramanian
ஜூன் 02, 2024 23:29

மோடி பத்து வருஷம் ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறார். இன்னும் பதினைந்து வருடங்கள் ஊழல் இல்லாத ஆட்சி செய்வார் . இனி இந்த ஆம் ஆத்மி கட்சி தேவை இல்லை.


selvelraj
ஜூன் 02, 2024 22:48

ஏம்பா உத்தம புத்திரா செய்கின்ற தப்பையும் செய்துவிட்டு அனுமார் கிட்ட போனா உன் தப்புல அவர் வந்து அங்கு எடுத்துக்குவார் என்று நினைத்தாயா ? ஊழலை எதிர்ப்பேன் என்று என்னமா கூவினாய், நானே சட்டுன்னு நம்பிட்டேன். அப்புறம் தானே தெரிந்தது உன் சுயரூபம். கருத்துக்கணிப்பு பொய்யா உண்மையா என்று இன்னும் 2 நாளில் தெரிந்துவிடும். உங்களை மாதிரி பொய் சொல்லும் ஆட்களை உங்கள் கட்சி சின்னத்தை வைத்தே அடிக்கணும். முதலிலே உங்கிட்டே இருந்தே ஆரம்பிக்கலாம்.


HoneyBee
ஜூன் 02, 2024 21:05

பொய் பொய்யா சொல்லும் நீ வெளில இருந்து என்ன செய்ய போகிறீர்.. வேஸ்ட் பயல்


veeramani hariharan
ஜூன் 02, 2024 21:04

He is most dangerous criminal than Mr.sarad Pawar, and Mr.Karunanid370 movie hi. Pl watch article How these people made our Country for their selfish goal


vadivelu
ஜூன் 03, 2024 06:54

He has a Ph D in criminal activities


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை