உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர் கொலையால் ஆத்திரம்; அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை; போர்க்களமான கோல்கட்டா

டாக்டர் கொலையால் ஆத்திரம்; அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை; போர்க்களமான கோல்கட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கிய சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கொலை

மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kujubuau&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

போராட்டம்

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் மேற்கு வங்கமே பதற்றத்திற்குள்ளாகியுள்ளது. மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.

சமூகவலைதளங்களில் அழைப்பு

இந்த நிலையில், ஆர்.ஜி., கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனயை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து நேற்றிரவு ஏராளமானோர் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.

தடியடி

தடையை மீறி உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். நாற்காலிகளை தரையில் அடித்து சூறையாடினர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசியதுடன், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தவறான பிரச்சாரம்

இது குறித்து கோல்கட்டா போலீஸ் கமிஷ்னர் வினீத் கோயல் கூறியதாவது:- மருத்துவமனையை சேதப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவி கொலை சம்பவத்தில் கொல்கத்தா போலீஸ் என்ன செய்யவில்லை? மாணவியின் குடும்பத்தினர் திருப்தியளிக்கும் விதமாக போலீசார் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், வதந்தியால் திசைதிருப்பப்படுகிறது. நான் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sai venkatesh
ஆக 15, 2024 17:43

Where is Tamil nadu thiruttu kumpal? Vck,DMK,voiko,undials,Papu&co,


gmm
ஆக 15, 2024 17:31

அரசு டாக்டர் கொலை. தனியாக சென்றாலும், சாப்பாடு வைக்க யாரும் இல்லை.? என்ன ஒரு மர்ம கதை. குற்றவாளி எங்கே? தடயம் எங்கே? மருத்துவ கல்லூரி மீது தடய மறைப்பு தாக்குதல். மாநில பொலிஸார் ஆளும் கட்சி ஆதரவு குழு. இது போன்ற மாநில நிர்வாகம் தேவையா? நீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கை மீது அதிகம் குறுக்கீடு. சென்னை, பம்பாய், கல்கத்தா, பெங்களூர்... போன்ற நகரங்கள் மத்திய யூனியன் பகுதி ஆக்க வேண்டும். அரசியல் குற்றம் அதிகரிக்கும் மாநில நிர்வாகம் முடக்க வேண்டும். அரசியல் நோக்கில் தமிழகம், டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், காஷ்மீர்.. மாநிலங்கள் மீது தீர்வு காண விரும்பாத வழக்கை நீட்டிக்கும் நீதிபதியை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.


மொட்டை தாசன்...
ஆக 15, 2024 16:06

இந்த கொடூரத்தை செய்தது மனித வடிவில் திரியும் மிருகமே. வேதனை என்னவெனில் இவனையும் காப்பாற்ற கருப்பு அங்கி அணிந்த பல பண பிசாசுகள் நம் நாட்டில் உள்ளன.


Jysenn
ஆக 15, 2024 15:14

Incidents like this happen because of the spineless central government that failed to use 356 in WB and in a highly deserving state in the south.


J.Isaac
ஆக 15, 2024 17:35

"சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் "சம்பவம் நடந்த ஒரிசா அரசை என்ன செய்யலாம்?


KRISHNAN R
ஆக 15, 2024 14:13

விதண்டா வாதம் அவிழ்து விட்டது இப்போ அவர்களை சாடுகிறது... வினைப்பயன். பொது மக்கள் .ஏமாளிகள்


rasaa
ஆக 15, 2024 14:08

தன்னையும், தன் அரசையும் காத்துக்கொள்ள மம்தா எந்த எல்லைக்கும் போவார். அவருக்கு உதவிடதான் பாங்களாதேஷிலிருந்து திருட்டுத்தனமாக குடியேறியுள்ள இனிய மார்கத்தினர் லட்சக்கணக்கில் உள்ளார்களே. சம்பவத்தை திசைதிருப்ப ஏற்படுத்திய சதி. உடனே இந்த அரசை நீக்கி ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தவேண்டும்.


ganapathy
ஆக 15, 2024 13:43

அடிச்சு உடச்சது மம்தா ஆளுங்க. தெரிஞ்சுக்க.


ganapathy
ஆக 15, 2024 13:42

அடிச்சு உடச்சது மம்தா கட்சி ஆளுங்க. அதாவது எந்தவிதமான தடயங்களும் இருக்கக்கூடாதுன்னு ஆஸ்பத்திரில ரணகளம் பண்ணினது மம்தா ஆளுங்க. இதுகூட தெரியாம


Svs Yaadum oore
ஆக 15, 2024 13:31

அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை என்பது மேற்கு வங்க மேடம் தடயங்களை அழிக்கும் தந்திரம்தான் ....மந்திரிகள் வாரிசு மேல் குற்றச்சாட்டு என்றால் அப்பறம் அரசியல்வாதிகள் சும்மா விட்டு விடுவார்களா ??.....இதை எதிர்த்து திராவிட அக்கா மணிப்பூருக்கு மெழுகுவத்தி ஏற்றி ஊர்வலம் சென்றது போல் மத சார்பின்மையாக மேற்கு வங்க மாணவிக்கு நியாயம் கேட்டு ஊர்வலம் செல்வார்


Svs Yaadum oore
ஆக 15, 2024 13:25

சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர். இதில் பலர் கொலை கொள்ளை பாலியல் என்று தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுகள் .....இப்படிப்பட்டவர்களை வோட்டு போட்டு தேர்ந்தெடுத்து விட்டு பிறகு சிபிஐ அல்லது கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது ....எந்த கட்சியாக இருந்தாலும் இது பொருந்தும் ....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை