உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பகல் கனவு காண்கிறார்: பா.ஜ., பதிலடி

ராகுல் பகல் கனவு காண்கிறார்: பா.ஜ., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் 150 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெறும் என ராகுல் கூறியிருந்தார். இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, '' அவர் பகல் கனவு காண்கிறார். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?'' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த பின், '' லோக்சபா தேர்தலில், பா.ஜ., 180 இடங்களை கைப்பற்றும் என சில நாட்கள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது, அக்கட்சிக்கு 150 இடங்களே கிடைக்கும் என நினைக்கிறேன்'' எனக் கூறியிருந்தார்.

பகல் கனவு

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில்: ராகுல் பகல் கனவு காண்கிறார். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?. உ.பி.யில் இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்துள்ளனர். என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உத்தரபிரதேசத்தில் ராகுல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. நாட்டு மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை விரும்புகிறார்கள். எந்த திசையில் காற்று வீசுகிறது என்பதை அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுலால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த முறையும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை